வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயணாளர்களுக்கு புதிய வசதியை வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தி தந்துள்ளது.


வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் அதில் உள்ள மைக் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு நாம் பேச வேண்டும். அதில், எவ்வளவு நேரம் பேசுகிறோமோ அதுவரை அந்த பட்டனிலிருந்து கையெடுக்க பேச வேண்டும் இல்லையெனில் நாம் பேசியது பதிவாகாது.


இந்நிலையில் இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் புதிய வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. அதுவென்னவென்றால், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் போது அந்த பட்டனை நீங்கள் தொட்டவுடன் லாக் போன்ற ஒரு குறியிடு வரும் அதனை பயன்படுத்தி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். தற்போது இந்த வசதியானது பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆனது விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயணாளர்களுக்கும் பயன்பாட்டில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.