பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WhatsApp-ல் பகிரப்படும் மீடியா பதிவுகளை தங்களது மொபைல் கேலரியில் வாடிக்கையாளர்கள் சேமித்துக்கொள்வது வழக்கம். ஆனால் பெரும்பாலும் இந்த அம்சத்தினை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை காரணம், தனிப்பட்ட விசமாக பகிரப்படும் மீடியா கன்டன்களை கேலரியில் சேமிப்பதன் மூலம் தேவையற்றோர் அதனை பார்க்ககூடும் என்பதால்.


எனவே இந்த குறைப்பாட்டிற்கு தீர்வு கானும் வகையில் தற்போது WhatsApp தனது பீட்டா வெர்ஸன் 2.18.159 பதிப்பில் மீடியாக்களை கேலரியில் மறைப்பதற்கான வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களது மீடியா பதிவுகளை கேலரியில் காண்பிக்காமல் மறைத்து வைத்துக்கொள்ளலாம்.


இந்த புதிய பதிப்பில் Setting - “Media visibility” என்னும் வசதியின் கீழ் இந்த அம்சத்தினை செயல்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் WhatsApp திறக்கப்படாமல் இந்த மீடியாக்களை கேலரியில் பார்பது என்பது கடினம்.



முன்னதாக குரூப் வீடியோ காலிங் வசதியினை WhatsApp-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது, இந்த வசதியினை செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தினை ஆண்ட்ராய்ட் 2.18.145+ மற்றும் iOS 2.18.52 இயங்குதளத்திற்கு வெளியிட்டது.


சமீப காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு WhatsApp பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மீடியா விசிபிளிட்டி, குரூப் காலிங் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக WhatsApp-ல் இருந்த நீக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை திரும்பப்பெறுவதற்கான வசதியினை நடைமுறை படுத்தியது குறிப்பிடத்தக்கது.


அதற்கு முன்னதாக குரூப் அட்மின்கள், குழுவில் இருக்கும் நபர்களின் அட்மின் பதவியினை நீக்க வழிவகுக்கும் வகையில் அப்டேட்டினை வழங்கியது. அதேவேலையில் குரூப் தகவல்கள் பக்கத்தில் இருக்கும் i குறியினை பயன்படுத்தி குறிப்பிட்ட குரூப்பில் இருக்கும் நபர்களை தனியாக தேடி, அவர்களுடன் சேட்டிங்க் செய்யும் வசதியினை அறிமுகம் செய்தது குறிப்பிட்டத்தக்கது.