வாட்ஸ் அப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. 


மேலும் வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை, சுமார் 450 மில்லியன் ஆக்டிவ் யூசர்களால் பயன்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற பல அம்சங்களை பொதுவான பயன்பாட்டிற்கு செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அது சார்ந்த விவரங்கள் பேஸ்புக் FB 8 2018 மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. கடந்த நவம்பரில் மட்டுமே வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுருந்தது குறிப்பிடத்தக்கது.


பேஸ்புக் FB 8 2018 மாநாட்டில் பேசப்பட்ட புதிய அம்சங்களை பொறுத்தவரை, பயனர்கள் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளில் தினமும் 2 பில்லியன் நிமிடங்களை செலவிடுகின்றனர். இதை மனதில் கொண்டு தற்போது வாட்ஸ் அப் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் உருட்டப்படவுள்ளது. இந்த வாட்ஸ் அப் ஆனது, ஒரே நேரத்தில் நான்கு பயனர்களுக்கு மத்தியிலான க்ரூப் வீடியோ சாட்டை நிகழ்த்த உதவும். 


க்ரூப் வீடியோ காலிங் மட்டுமின்றி, மிக விரைவில் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களுக்கான ஆதரவு கிடைக்கும் என்றும் பேஸ்புக் FB 8 2018 மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.