கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.,104 இடங்களை வென்றுள்ள போதிலும் ஆட்சியமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக குமாரசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது..!


> காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துவிட்டோம். முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கு இடமில்லை என்றார். 


> எங்கள் கட்சி எம்எல்ஏ கைப்பற்ற நினைத்தால் பாஜக-வை உடைப்போம்.


> கர்நாடக தேர்தல் முடிவுகள் முழு திருப்தி அளிக்கவில்லை.


> தேர்தலில் அதிக தொகுதிகளை வென்றுவிட்டதால், மக்களின் ஆதரவு பாஜக-வுக்கு உண்டு என்பதில் உடன்பாடு இல்லை.


> மணிப்பூர், கோவா, மேகலயா போன்ற மாநிலங்களில் ஆட்சியை பறித்துக்கொண்டது பாஜக.


> அதேபோல கர்நாடகாவிலும் எப்படியாதாவது ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது.


> முதல் அமைச்சர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது.


> எங்கள் எம்எல்ஏக்கள் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். எங்கள் எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசுகிறார்கள் பாஜகவினர்.


> ஜே.டி. (எஸ்) எம்.எல்.ஏ-க்களுக்கு 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசுகிறார்கள் பாஜகவினர். இந்த கருப்பு பணம் எங்கிருந்து வருகிறது? வருமான வரி அதிகாரிகள் எங்கே? 


> பாஜக-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.


> பாஜக-வுடன் பேச்சுவாரத்தை நடைபெற்றது என்பதில் உண்மை இல்லை.


> கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. பரமேஸ்வராவுடன் சேர்ந்து மீண்டும் ஆளுநரை இன்று சந்திப்போம் 


இவ்வாறு ஜே.டி. (எஸ்) சட்டமன்ற தலைவரானார் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.