ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில், தனது முன்னாள் கணவரின் மீது மனைவி அமிலத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை ஜுன்ஜுனு நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஜுன்ஜுனு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைப்பெற்று வருவதாகவம், இந்த வழக்கின் விசாரணைக்கு இருவரும் வந்ததாகவும் தெரிகிறது.


அமிலத்தை வீசிய மனைவி தற்போது மற்றொரு திருமணம் செய்துகொண்டார் எனவும், இன்று நடந்த சம்பவத்தில் தனது முன்னாள் கணவரின் மீது அமிலத்தை வீச அவர் தனது தற்போதைய கணவரினை துணைக்கு அழைத்து வந்துள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயரினை காவல்துறையினர் வெளியிட மறுத்துள்ளனர்.


மேலும் இச்சம்பவத்திற்கான காரணம் முன்விரோதமாக இருந்தப்போதிலும், ஏன் இன்றைய தினம் அவர் இவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்து ஆராய, அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட கணவரினை காவல்துறையினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.