உலக சாம்பியன் சாலி பியர்சன், கோல்ட் கோஸ்ட் 2018 காமன்வெல்த் போட்டிகளில் இருந்து அகில்லெஸ் காயம் காரணமாக விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு முறை உலக மற்றும் இரட்டை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இவர் இந்த அறிவிப்பினை இன்று அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் அவுஸ்திரேலியாவுக்காக போட்டியிடவும், வெற்றிப்பெறவும் முடிந்தவரை முயற்சித்தேன், கடந்த இரண்டு நாட்களில் என்னுடைய பயணத்தின் போதும் நான் தளராத நம்பிக்கையில் தான் இருந்தேன். ஆனால் தற்போது அந்த மனநிலையில் நான் இல்லை, என்னை என் காயம் வென்றுவிட்டது." என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் "இது எனது ஆரோக்கியம் குறித்த விஷயம், 2020-ல் டோக்கியோ செல்ல விரும்புகிறேன்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதுகுறித்து CWG ஒருங்கினைப்பாளர் தெரவிக்கையில், சாலி பியர்சன் சிறந்த போட்டியாளர். அவருடைய வெற்றிடத்தினை யாராலும் நிரப்ப முடியாது. பல வீரர் வீராங்கனைகளுக்கு முன்னோடியாக திகழ்பவர். அவரது நினைவினை அவரது பின்தொடர்பாளர்கள் நிச்சையம் நினைவுபடுத்திக் கொண்டே தான் இருப்பர் என தெரிவித்துள்ளார்.