பாகிஸ்தானின் லாகூர் நகரில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பேரணி நடைபெறும் பாதையில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் சுமார் 45 பேர் காயமடைந்தனர் மேலும் ஒருவர் மரணமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், லாகூர் நகரில் நாளை நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளார். இஸ்லாமாபாத் நகரில் இருந்து லாகூர் வழியாக இந்த பேரணி நடைபெற உள்ளது. 


இந்நிலையில் லாரியில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சுமார் 45 பேர் காயமடைந்தனர் மேலும் ஒருவர் மரணமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக அந்த லாரி அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இந்த குண்டு வெடிப்பின் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் பேரணி ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.