ஒசாமாவின் மகன் ஹம்ஸா பற்றி தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாத குழுக்களின் புதிய தலைவனாக உருவாகியுள்ளார் ஒசாமாவின் மகன் ஹம்ஷா பின்லேடன். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தேதி தீவிரவாதிகள் மூலம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன். இதற்கு தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க சிறப்புப் படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான்.


அதன் பின்னர், பின்லேடனின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் ஹம்ஸா பின்லேடன் தீவிரவாத குழுக்களின் தலைமை பொறுப்பை ஏற்றார். ஹம்ஸா பின்லேடனை ’தேடப்படும் சர்வதேச தீவிரவாதி’ என 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்தது. 


இந்நிலையில், ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் தருபவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.