துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: 10 பலி!
துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் படுகாயமடைந்தனர்.
துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் படுகாயமடைந்தனர்.
துருக்கியிலுள்ள எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் மொத்தம் 362 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சரிகார் கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும் அந்த ரயில் திடீரென தடம் புரண்டு கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 73 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பதற்காக 100 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் ஏர் ஆம்புலன்களும் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த ரயில் விபத்த்தானது மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.