ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த ரஷ்ய படையெடுப்பிற்கு இதுவரை எந்தவித தீர்வோ, முடிவோ எட்டப்படவில்லை.
உக்ரைனின் 'சுமார் 20 சதவீதத்தை' ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த ரஷ்ய படையெடுப்பிற்கு இதுவரை எந்தவித தீர்வோ, முடிவோ எட்டப்படவில்லை.
ரஷ்யப் படைகள் பல முனைகளில் உக்ரைனின் நகரங்களைத் தாக்கி வருகின்றன. இருந்தாலும், உக்ரைனின் இராணுவம் மற்றும் குடிமக்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் ரஷ்ய ராணுவம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை அடையமுடியவில்லை.
இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைனின் மீது போர் தொடுத்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தங்கள் நாட்டின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்ய இராணுவப் படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க | போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா
இருந்தபோதிலும், "உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் இதுவரை 1,017 இடங்களை விடுவித்துள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
"ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில்மக்கள் வசிக்கும் 3,620 பகுதிகளை ஆக்கிரமித்தன. அவர்களில் 1,017 ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டன. மேலும் 2,603 பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இன்றைய நிலவரப்படி, உக்ரைனின் நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதம் ஆக்கிரமிப்பாளர்களின் வசம் இருக்கிறது.
அதாவது கிட்டத்தட்ட 125,000 சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது” அரசியல்வாதிகள் மற்றும் லக்சம்பர்க் மக்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா, உக்ரைனின் சில பகுதிகளைத் தாக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கியது என்பதை தனது உரையின் போது, ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா
அப்போது, 2014 மற்றும் 2022 க்கு இடையில், உக்ரைனின் நிலப்பரப்பின் 43,000 சதுர கி.மீ அளவை ரஷ்யா கைப்பற்றியது என்பதை உக்ரைன் அதிபர் சுட்டிக்காட்டினார்.
அப்படி கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பகுதிகளில் கிரிமியா மற்றும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் பெரும் பகுதியும் அடங்கும்.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனின் சுமார் 300,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சுரங்கங்கள் இருப்பதையும் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, இது வரும் ஆண்டுகளில் நாட்டின் மண்ணை மாசுபடுத்தும் என்றும் கவலை தெரிவித்தார்.
12 மில்லியன் உக்ரேனியர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR