போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா

உக்ரைனில் ரசாயன ஆலை மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் அபாயகரமான நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கர் வெடித்தது... மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 06:17 AM IST
  • உக்ரைன் ரசாயன ஆலையை தாக்கியது ரஷ்யா
  • நைட்ரிக் அமில டாங்கர் வெடித்தது
  • மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது
போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா title=

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார்.

நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.

மேலும் படிக்க | உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலினால் ரசாயன ஆலையில் இருந்த நைட்ரிக் அமில டாங்கர் தாக்கப்பட்டது என்று ஆளுநர் செர்ஜி கெய்டே வெளியிட்ட சமூக ஊடக செய்தியில் தெரிவித்தார். 

செவரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடபெற்றது.

"சோடா கரைசலில் செறிவூட்டப்பட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது என்று அந்நகர கவர்னர் மக்களுக்கு அறிவுறுத்தினார். 

செவரோடோனெட்ஸ்கில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் பைத்தியக்காரத்தனமானது, மனிதாபிமானம் அற்றது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்ய இராணுவம், ரஷ்ய தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் வீரர்களும் பைத்தியங்கள் இல்லை என்று சொல்வதுதான் ஆச்சரியம் இல்லாதது என்று சமூக ஊடகமான டெலிகிராமில் நேற்று (2022, மே 31) பேசிய ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனின் படைகளில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் நைட்ரிக் அமிலம் இருந்த டேங்கர் "வெடித்தது" என்று மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.  

"Azot இரசாயன ஆலையில், இரசாயனங்கள் கொண்ட ஒரு கொள்கலன் வெடித்தது. முதற்கட்டமாக, அந்த டேங்கரில் இருந்தது நைட்ரிக் அமிலம்," என்று தெரியவதுள்ளது என லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதிநிதி ரோடியன் மிரோன்சிக், டெலிகிராம் செயலியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News