112 வயதில் உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ஜப்பான் தாத்தா
உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை ஜப்பானைச் சேர்ந்த மாஸாசூ நோனோகா பெற்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹொக்கிடோவில் இருக்கும் 112 வயதான முதியவர் மாஸாசூ நோனோகா. உலகின் மிகவும் வயதான நபர் என்ற சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
மாஸாசூ நோனோகா 1905-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பிறந்தார். நேற்று (செவ்வாய்கிழமை) அவருக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது மாஸாசூ நோனோகா தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மாஸாசூ நோனோகாவுக்கு ஏழு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர் 1931-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
112 வயதான மாஸாசூ நோனோகா, தினமும் செய்தித்தாள் படிப்பது, இசை கேட்பது என பொழுது கழிக்கிறார்.
ஸ்பெயினிலிருந்து பிரான்சிஸ்கோ நுவஸ் ஆலிவேராவிற்குப் பிறகு அவர் பட்டத்தை எடுப்பார், இவர் 113 வயதில் ஜனவரி மாதம் இறந்தார்.
மாஸாசூ நோனோகா முன்பாக கடந்த 1904-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பிறந்த ஸ்பெயினைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ஒலிவாரா தான் 113 வயதில் கின்னஸ் சாதனை படைத்தார். கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.