ஆப்கானிஸ்தான் உள்ள அந்நாட்டு உச்சநீதிமன்றம் அருகே இன்று மாலை தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை ஊழியர்கள் வேலை முடிந்து புறப்படத் தயார் ஆகிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடித்தது. கோர்ட் நுழைவு வாயிலின் மற்றொரு பக்கம் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்