பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சார்கோதாவின் முகமது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்காவின் நிர்வாகி 20 பேர் கொன்று உள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பிய 4 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்கா நிர்வாகி அப்துல் வாஹீத் அந்நாட்டு அரசு பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது. 


அப்துல் வாஹீத் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தர்காவை நிர்வாகம் செய்வதில் பிரச்சனையும் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


அப்துல் வாஹீத் தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார். பின்னர் அவர்களை கொலை செய்து உள்ளார் என குறிப்பிடத்தக்கது.