சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 259 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இதுவரை நாடு முழுவதும் 11791 பேர் பாதிக்கபட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஸ்கை ராக்கெட் வேகத்தில் பரவி பரவும் தொற்றுநோய்கள் காரணமாக அவசரகால நிலை 1 எச்சரிக்கை 31 மாகாணங்கள், தன்னாட்சி பகுதிகள் மற்றும் அதன் நிலப்பரப்பில் உள்ள நகராட்சிகளுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தேசிய தலைநகர் பெய்ஜிங் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் SARS நோய் பரவிய போது பயன்படுத்தப்பட்ட 17 ஆண்டு பழைய மருத்துவமனையை புதுப்பித்து வருகிறது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன்  சீனா முழு  ஒத்துழைப்பு தருவதாகவும் அவர்களை சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதியளித்துள்ளதாகவும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டாங் ( sun weidong ) தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உலக சுகாதார அமைப்புடன் சீன அரசு பகிர்ந்து வருவதாகவும் தெரிவித்த சீனத்தூதர், சீனாவின் நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை இருப்பதாக WHO தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.


மேலும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 218 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி வீடுதிரும்பியதாக கூறிய சீனத்தூதர், கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படக்கூடியது , கட்டுப்படுத்தக் கூடியது, குணப்படுத்தக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.