நேபாளத்தில் 700மீ பள்ளத்தில் விழுந்த கல்லூரி பேருந்து: 23 பேர் பலி; 14 பேர் படுகாயம்
நேபாளத்தில் கல்லூரி பயிற்சி முடித்து திரும்பும் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்த பேருந்து விபத்துக் குள்ளானதில் 23 பேர் பலி.
நேற்று (வெள்ளிக்கிழமை) நேபாளத்தில் உள்ள சல்லியன் மாவட்டத்தில் கல்வி பயிற்சியை முடித்துக்கொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 37 பேர் வாகனம் மூலமா திரும்பி வந்துள்ளனர். அந்த வாகனம் மலைப்பாங்கான பகுதியில் பயணித்து கொண்டு இருக்கையில், திடிரேனே வாகனம் பள்ளதாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
மாவட்ட போலீஸ் அதிகாரியின் தகவலின் படி, வாகனத்தில் மொத்தம் 37 பேர் இருந்தனர், அதில் 34 பேர் மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஓட்டுனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்ரி கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில் இருந்து பஸ் 700 மீட்டர் பள்ளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 23 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.