இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பள்ளத்தில் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தியைக் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று தெரிவித்தன. நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி ஊடகம் கூறிய தகவலில்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 35 பயணிகளை பஸ்ஸில் பயணம் செய்துள்ளனர். பயணிகள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு விழாவில் கலந்துக் கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைபர் பக்துன்க்வாவின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தின் குண்டியா தெஹ்ஸிலின் பக்ரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் பாதுகாப்புத் தலைவர் வார்டன் எஹ்சன்-உல்-ஹக் தெரிவித்தார்.


இதுவரை கிடைத்த தகவலின்படி, பாலம் பாழடைந்த நிலையில் இருந்ததால், பயணிகள் நிறைந்த பஸ்ஸின் அழுத்தத்தை தாங்க முடியாமல் பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.