வாரத்துக்கு எத்தனை நாள் வேலையில் இருந்து விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே வார விடுமுறை கொடுக்கும் நிறுவனங்கள், பெரும்பாலும் தனியார் நிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை அளிக்கின்றன. ஆனால், வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்தால் எப்படி இருக்கும்? 4 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்படுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கேள்வி கூட தற்போது இந்தியாவில் சாத்தியமில்லை என்றாலும், உலகின் பல நாடுகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கின்றன. இந்த நிலையில் இன்று (2024 பிப்ரவரி 1) முதல் வாரத்திற்கு 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கும் பட்டியலில்  தற்போது ஜெர்மனியும் இணைந்துவிட்டது.


உலகம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பணிநாட்கள் என்று, சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது. இது இந்தியாவிலும் நடைமுறையில் இருக்கும் வழக்கம். 


இன்று முதல் ஜெர்மனியில் வாரம் 4 நாள் மட்டுமே பணி நாள் என்றும் 3 நாட்கள் ஓய்வு என்ற நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால்  உற்பத்தி திறன், பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என அந்நாடு கண்காணிக்கும். 


இந்த பைலட் திட்டம், இன்று முதல் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். வாரம் 4 நாள் வேலை முறையை செயல்படுத்தி, அதன் விளைவுகளை ஆராயும் நாடுகளில் தற்போது ஜெர்மனியும் இணைந்துவிட்டது.


மேலும் படிக்க | தினம் 12 மணி நேர வேலை... வார விடுமுறை 3 நாட்கள்... தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றம்..!!


வேலை நாட்களை 4 ஆகக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம், 4 நாட்களுக்கு 32 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வீதம், வாரம் ஒன்றுக்கு 40 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


4 நாட்கள் வேலை


வளர்ச்சி அடைந்த நாடுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜப்பான், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன் உட்பட பல  நாடுகளில் ஊழியர்கள் குறைவான நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும்.


எவ்வளவு நேரம் பணி செய்ய வேண்டும் என்பதை மணிக்கணக்கில் நிர்ணயிக்கும் நாடுகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம், 4 நாட்களுக்கு 32 மணி நேரம் வேலை என சில நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், வேறு சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வீதம், வாரம் ஒன்றுக்கு 40 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்


ஆஸ்திரேலியா,  ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின், கனடா, ஸ்வீடன் என பல நாடுகளில் வாரம் 4 நாள் வேலை திட்டம் 2022லிருந்தே அமலில் இருந்து வருகிறது. டென்மார்க், சவுதி அரேபியா, பின்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கிறது.


அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை நாட்கள் 


3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவது மட்டுமல்லாமல் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.


மூன்று நாட்கள் வார விடுமுறை என்பது, நிறுவனத்தின் உற்பத்தித் திறன் தொடர்ந்து அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுகிறதா என்பதை சோதனை செய்வதற்காக இத்தகைய புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய திட்டம் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  இதே போல நடைமுறை கொண்டு வரப்படுமா என ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


மேலும் படிக்க | ஏழு ரூபாய் மாத வாடகைக்கு வீடு ரெடி! 500 ஆண்டுகளாக வாடகை அதிகரிக்கவே இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ