காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் யு.எஸ். விமானபடையின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதல், நேற்று (புதன்கிழமை) இரவு இஸ்லாமிய போராளிகள் மறைவிடத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தற்செயலாக வயலுக்கு அருகிலுள்ள வேலைபார்த்துக் கொண்டு இருந்த விவசாயிகளை தாக்கியது என மூன்று அரசாங்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.


கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தின் உறுப்பினர் சோஹ்ராப் கதேரி, நேற்று நடந்த விமான தாக்குதலில் வயலில் வேலைப்பார்த்துகொண்டு இருந்த 30 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 40 பேர் படு காயமடைந்துள்ளனர் எனக் கூறினார்.


காபூலில் நடைபெற்ற தாக்குதலை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. ஆனால் உடனடியாக தாக்குதல் விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது. இதைக்குறித்து எந்தவொரு கருத்தையும் யு.எஸ் விமான படைகள் கூறவில்லை.