பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு திங்கட்கிழமை இரவு தொடங்கி போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். புலக்கான் மாகாணத்தில் நடந்த இந்த சோதனையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சோதனைகளின்போது, 200 கிராம் போதைப்பொருள், 785 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.


இதுபற்றி போலீஸ் சீனியர் சூப்பிரண்டு ரோமியோ காராமட் ஜூனியர் கூறும்போது, ‘‘புலக்கான் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் 67 அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர். 109 பேர் கைது செய்யப்பட்டனர்’’ என்றார்.