கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பார்களா? உறுதியாக சொல்ல முடியாது - ஈராக் எஃப்எம்
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் வேலை செய்து வந்த 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈராக் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாபாரி, 5 நாள்(ஜூலை 24-28) அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் உள்ளார்களா?, இல்லையா? என்பதற்கு தேவையான போதிய ஆதாரம் தங்கள் நாட்டு அரசிடம் இல்லை எனவும், இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா அரசுடன் ஈராக் தொடர்பில் உள்ளது. கடத்தப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து நடவடிக்கையை ஈராக் அரசு மேற்கொள்ளும் எனவும் கூறினார்.