புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை பூகம்பம் தாக்கியது. அதன் பின்னர் இன்றும் (வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir) பகுதியில் பூகம்பம் Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மதியம் 12.31 மணிக்கு ஏற்பட்டது, இதன் ரிக்டர் அளவு 4.8 ஆக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பாகிஸ்தான் - இந்தியா (Pakistan-India Border - ஜம்மு-காஷ்மீர்) எல்லையில் ஏற்ப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூகம்பத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


செப்டம்பர் 24 அன்று ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அதிகாரிகள் வழங்கினார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் தலைநகர் புது தில்லி உட்பட இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் உணரப்பட்டது.


இந்த நடுக்கம் 8-10 வினாடிகள் உணரப்பட்டது. ஆனால் அதன் வலுவான நடுக்கம் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் லாகூர் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட பாகிஸ்தான் முழுவதும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பஞ்சாப் மாகாணத்தில் ஜீலம் நகருக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீர்பூர் நகரத்திற்கு அருகில் ஏற்பட்டது.


தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அறிக்கையின்படி, காயமடைந்த 459 பேரில் 160 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மிர்பூரின் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) படி, பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் மீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.