70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,300 பணியாளர்கள் பங்கேற்புடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற உலகின் மிகப்பெரிய சோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய உலகளாவிய ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையோட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை பெறுகிறார்கள். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இவர்களுக்கு முழு ஊதியம் கொடுக்கப்படுகிறது.


இத்திட்டமானது ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை காணவும் கண்காணிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி அடுத்த 6 மாதங்களுக்கு வாரத்திற்கு 5 நாள் வேலை செய்து வந்த ஊழியர்களை 4 நாட்கள் மட்டும் வேலை செய்ய வைத்து அவர்களின் மன அழுத்தம், குடும்ப நலம், பணியின்போது அவர்களின் பங்களிப்பு, வேலையில் மெருகு கூடுகிறதா குறைகிறதா என்று பார்க்கப்படும்.


மேலும் படிக்க | IIP Recruitment 2022: எஞ்சினியரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு


வங்கியியல், விருந்தோம்பல், பராமரிப்பு மற்றும் அனிமேஷன் ஸ்டுடியோக்கள் ஆகிய கம்பேனிகள் உட்பட சுமார் 70 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க கையொப்பமிட்டுள்ளன. 


இதில் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கல்லூரியின் வல்லுநர்கள், சுயாட்சி மற்றும் லாப நோக்கற்ற கூட்டணியினர் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டு ஒருங்கிணைக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


இங்கிலாந்தில் மட்டுமில்லாமல் உலகளவில், இந்த ஒருங்கிணைந்த சோதனைகளில் பங்கேற்க, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 7,000 பணியாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.


மேலும் படிக்க | பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!


இவ்வாறு உலகமயமாக்கப்படவுள்ள இந்த சோதனையின் வெற்றியைப் பொருத்து இந்தியாவிலும் வெளிநாட்டு கம்பேனிகளின் வேலை நாட்கள் குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என வல்லுநர்கள் தீர்க்கமாக கூறுகின்றனர்.


6 மாதத்தில் இந்த சோதனையின் முடிவுகள் உலகத்தின் வேலை மரபை மாற்றியமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR