மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த பாலஸ்தீனர்களுக்கு செய்த வித்யாசமான நினைவு அஞ்சலி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே வன்முறை கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இரு நாட்டு படையினராலும், பொதுமக்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், பல்வேறு கலவரங்கள் மற்றும் வன்முறையில் உயிரிழந்த 4,500 பாலஸ்தீனர்களை நினைவுகூறும் நிகழ்விற்கு காலணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 


பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய சபை கட்டிட வளாகத்தில் 4,500 ஜோடி காலணிகள் அடுக்கி வைத்து உயிரிழந்த பாலஸ்தீனர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன் மூலம், பக்க சார்பாக இல்லாமல் மனிதநேயத்தை புரிந்து நடப்பதற்கு உலக மக்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.  



மத்திய கிழக்கில் உயிரிழந்த இந்த 4,500 பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் காஸா எல்லையில் மரணித்தவர்கள் ஆகும். காஸா எல்லை பகுதியை பாதுகாக்கவும் நாட்டு மக்களின் நலனை வலுப்பத்துவதே இஸ்ரேல் படையினரின் நோக்கம் என்றும், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியின் போது சில பாலஸ்தீனர்கள் சுட்டுக்  கொல்லப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது. 



மேலும், காஸா எல்லையில் பொதுமக்கள் குறிவைக்கப்படுவதில்லை என்றும், ஹமாஸ் பயங்கரவாதிகளை தாக்கும் போது மக்கள் சிலர் உயிரிழப்பதை தடுக்க முடியவில்லை எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரைப் போன்று, பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ திகழ்வதாக  பாலஸ்தீனர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.