சீனா: கொரோனா தொற்று உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இயற்கையும் அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் பல முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் ரிக்டர் அளவுகள் பெரும்பாலும் குறைவாகவே இருந்தாலும், இவை அடிக்கடி ஏற்படுவதால் அச்சம் நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நமது அண்டை நடான சீனாவில் (China) பீஜிங் நேரம், இன்று காலை 9.28 மணியளவில் வடமேற்கு க்ஸின்சியாங்க் (Xinjiang) மாகாணத்தில் 5.0 அளவிலான நிலநடுக்கம் (Earthquake)  ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சீன நிலநடுக்க இணைய மையம் (CENC) உறுதி படுத்தியுள்ளது.


நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 44.42 டிகிரி வட அட்சரேகை மற்றும் 80.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மையப்புள்ளியின் ஆழம் பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டர் அடியில் இருந்ததாக அளவிடப்பட்டுள்ளது.


இப்பகுதி க்ஸின்சியாங்-கஸகஸ்தான் எல்லைப் பகுதியில் வருகிறது.


கடந்த சில நாட்களாக சீனாவை கடுமையான மழை மற்றும் வெள்ளம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் பேரழிவு அபாயம்


சீனாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ள நிலைமையை சமாளிக்க இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக ஜின்ஹுவா (Xinhua News Agency) தெரிவித்துள்ளது.


ஜூலை 4 முதல் , நாடு முழுவதும் 212 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  அவற்றில் 19 ஆறுகளின் நீர் மட்டமானது, இதற்கு முன்பு எப்போதும் பதிவாகாத அளவில் உள்ளது என சீனாவின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான தைஹு ஏரியின் (Taihu Lake) நீர் மட்டம் தொடர்ந்து 15 நாட்களாக அபாய அளவை விட உயர்ந்திருப்பதாக நீர்வள அமைச்சகம் கூறியது.