நியூயார்க்: இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (யு.என்.எஸ்.சி) தற்காலிக உறுப்பினர் சேர்க்கைக்கு 55 நாடுகளைக் கொண்ட ஆசிய பசிபிக் குழு ஏகமனதாக இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இருக்கிறது. அந்த தற்காலிக உறுப்பினர்களில் ஐந்து நாடுகள் ஒவ்வொரு வருடமும் வெளியேறி புதிய ஐந்து நாடுகள் சுழற்சி முறையில் உறுப்பினர்களாக தேர்ந்தேடுக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தேடுக்கப்படும் நாடுகள் இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்கும். 


இதற்க்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. வரும் 2021 - 22 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. 


இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், “ஆசிய பசிபிக் குழு ஏகமனதாக எடுத்த நடவடிக்கை, 2021-22 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்" என ட்விட் செய்துள்ளார்.


மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா இடம் பெறுவதற்கு 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த பட்டயலில் சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளது. 


இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி கூறியுள்ளார்.