அமெரிக்காவில் 24 மணி நேரத்திற்குள் மற்றொரு துப்பாக்கிச்சூடு; 9 பேர் பரிதாபமாக பலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீண்டு இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளது. ஓஹியோவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுமார் 9 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல்துரைய்னரால் கொல்லப்பட்டார்.


இந்த தாக்குதல் கூத்து முதலில் ட்விட்டரில் டேட்டன் காவல்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “#ஓரிகன் டிஸ்டிரிக்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பற்றி நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். தயவுசெய்து இந்த பகுதியை தவிர்க்கவும். மேலும் தகவல்கள் வர உள்ளன” என குறிப்பிட்டுள்ளனர். 


துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிசார் பின்னர் உறுதிப்படுத்தினர். துப்பாக்கிச்சூடு தொடங்கியபோது டேட்டன் பொலிஸ் உடனடியாக அந்த இடத்திற்கு வந்தண்டைன்தனர். மேலும் "விரைவாக பதிலளித்து விரைவாக முடிவுக்கு வர முடிந்தது. 


பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனும் (FBI) விசாரணைக்கு உதவ அந்த இடத்தை அடைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நடந்த மற்றொரு வெகுஜன துப்பாக்கிச் சூட்டில், 21 வயதான துப்பாக்கி சுடும் நபர் டெக்சாஸின் எல் பாஸோவில் வால்மார்ட்டில் 20 பேரைக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.