மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் பிறந்த குழந்தை; அதிர்ச்சியில் மருத்துவர்கள்
கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக அல்லது மரபணு தொடர்பான குறைபாடு காரணமாக குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் பிறக்கையில் பொதுவாக, கைகள் அல்லது கால்விரல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அல்லது அதிகமாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பிறப்புறுப்புகளைப் பொறுத்தவரை, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் இருந்ததாக இது வரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்
ஈராக்கில் மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அந்தரங்க உறுப்புகள் இருப்பதை தங்கள் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொசூல் அருகே நடந்த சம்பவம்
ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் அருகே குழந்தை பிறந்தது. இந்த குழந்தையிடம் காணப்பட்ட பிறப்புறுப்பை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த இந்த குழந்தைக்கு மூன்று பிறப்புறுப்புகள் இருந்தன. அதனிடம் இருந்த ஆண்குறியுடன், மேலும் இரு ஆண் குறிகல் இணைந்திருந்தன. அதில் ஒன்று 2 செ.மீ நீளமும், மற்றொன்று 1 செ.மீ. நீளத்திலும் இருந்தது.
ALSO READ | BMW காரை “கைது” செய்த விவசாயி; சமூக ஊடகத்தில் வைரலாகிய போட்டோ
எனினும் மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்த பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை கண்டறிந்து, பின் அந்த குழந்தையின் கூடுதல் பிறப்புறுப்புகள் இரண்டும் அகற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக அல்லது மரபணு தொடர்பான குறைபாடு காரணமாக குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
மிகவும் அரிதான வழக்கு
மூன்று பிறப்புறுப்புகளுடன் குழந்தை பிறப்பது மிக அரிது என கூறிய மருத்துவர்கள், ஆனால் இது உலகின் முதல் நிகழ்வு அல்ல எனவும், இது Supernumerary penises occur என்று அழைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளனர். உலகளவில் 50 முதல் 60 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இது போல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இரண்டு பிறப்புறுப்புகளுடன் 100 குழந்தைகள் பிறந்துள்ளதாக உலகளவில் பதிவாகியுள்ளன எனவும், ஆனால் மூன்று பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ட்ரிஃபாலியா (triphallia) என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்
ஈராக் குழந்தைக்கு விஞ்ஞானிகள் ட்ரிஃபாலியா (triphallia) என பெயர் சூட்டியுள்ளனர். இது தொடர்பாக ஒரு சர்வதேச ஆய்வும் வெளியிடப்பட்டுள்ளது. இது சர்வதேச அறுவை சிகிச்சை இதழில் வெளிவந்தது. இதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இருப்பினும், அந்த வழக்கு தொடர்பாக அதிக மருத்துவ ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
ALSO READ | உலகின் மிகப் பெரிய டெலெஸ்கோப் FAST; சீனாவின் பிரம்மாண்டமான Sky Eye
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR