ராயல் ஆஸ்திரிரேலிய போர் விமானம் திடிர் தீவிபத்திற்குள்ளானது என ஆஸ்திரேலிய ராணுவம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயல் ஆஸ்திரேலிய விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்ட போது, அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் திடிரென தீ பற்றி எரிந்தது. எனினும் இந்த விபத்தில் வீரர்களுக்கு எந்த வித ஆபத்தும் நிகழவில்லை என ஆஸ்திரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவமானது, நீலிஸ் விமான படை சராங்கத்தில் வீரர்கள், EA-18G Growler-ல் பயிற்சியில் ஈடுபடுகையில் நிகழ்ந்ததாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


காலை சுமார் 10.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தானது, விமானம் புறப்பட தயாறாகையிலேயே நிகழ்ந்தது என வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


விபத்தின் ஆரம்பத்திலேயே விரர்கள் முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்து வெளியேறியதால், விபத்தில் யாருக்கம் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!