பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக உள்ளது பாரிஸ் ஈபிள் டவர். உலககின் பிரபலமான சர்வதேச சுற்றுலா தளம் இந்த ஈபிள் டவர், இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சூழ்நிலையில், பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவரில் இருந்து ஒருவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பாராசூட் மூலம் குதித்துள்ளார். இத்தகவலை தெரிவிக்கையில், குதித்த அந்த  நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈபிள் டவரில் வேலை செய்த பணியாளர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுபவம் வாய்ந்த மலையேறும் பயிற்சியில் தேர்ந்த நபர்


செய்தி நிறுவனமான AFP வெளியிட்டுள்ள செய்தியில், சம்பவம் தொடர்பான இந்த நபர் ஒரு அனுபவம் வாய்ந்த மலையேறுபவர் என தெரிவித்தனர். ஈபிள் டவர் மக்கள் வருவதற்க்காக அன்றையை தினத்தில் திறப்பதற்கு முன்பே, இந்திய நேரப்படி அதிகாலை 5.00 மணிக்கு (0300 GMT) ஈபிள் கோபுரத்திற்குள் நுழைந்தது விட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன


மிக விரைவாக கோபுரத்தின் உச்சிக்கு  சென்று நபர்
பீபிள் டவர் தளத்தின் ஆபரேட்டர் பணியில் இருப்பவர் இது குறித்து கூறுகையில், பாதுகாவலர்கள் உடனடியாக, மேலே ஏற முயற்சிக்கும் மனிதனைக் கண்டாலும், யாரும் அவரைப் பிடிக்க முடியாத அளவுக்கு விரைவாக கோபுரத்தின் உச்சிக்கு  சென்று விட்டார் என தெரிவித்தனர். அவர் மேலே ஏறும் போதே, ஒரு பையில் பாராசூட்டை எடுத்துச் சென்றார்.


மேலும் படிக்க | பிரதமராக அல்ல... இந்துவாக வந்திருக்கிறேன்... ராமர் கதாகாலட்சேபத்தில் ரிஷி சுனக்!


அருகில் உள்ள மைதானத்திற்குள் பாராசூட் இறங்கியது


இந்த நபர் 330 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியை அடைந்தவுடன், அவர் குதித்தார். அந்த நபர் அருகிலுள்ள மைதானத்தில் பாரசூட் உதவியுடன் இறங்கினார். இதனை அடுத்து, அங்கு இருக்கும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் குற்றச்சாட்டில் பேரில், அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். "இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் கோபுரத்தில் அல்லது கீழ் வேலை செய்யும் மக்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன" என்று SETE ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 சிறிது தாமதமாக திறக்கப்பட்ட ஈபிள் டவர்


ஈபிள் கோபுரம் வழக்கமாக காலை 9:00 மணிக்கு திறக்கப்படும் ஆனால் இந்த சம்பவத்தால் சிறிது தாமதமாக திறக்கப்பட்டது. அந்த நபருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஆபரேட்டர் செட்டே தெரிவித்தார். தொடர்ந்து உலக புகழ் பெற்ற இந்த ஈபிள் டவர் பகுதியில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவது குறித்து சுற்றுலா பயணிகள் கவல் வெளியிட்டுள்ளனர்.


ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம்


குடிபோதையில் அமெரிக்க சுற்றுலாப் பயணி ஈபிள் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. ஈபிள் கோபுரத்தின் பாதுகாப்பு அமைப்பில் கேள்விகளை எழுப்பும் ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவம். முன்னதாக, நினைவுச்சின்னத்தின் ஆபரேட்டர் செவ்வாயன்று, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு குடிபோதையில் சுற்றுலாப் பயணிகள் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10:40 மணியளவில் நுழைவுச் சீட்டைச் செலுத்திய பின்னர், சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தின் உச்சிக்கு படிக்கட்டுகளில் ஏறும் போது பாதுகாப்பு தடைகளைத் தாண்டியதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | முன்னாள் காதலனின் வன்மம்! பெண்ணுக்கு 99 பில்லியன் இழப்பீடு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ