தண்ணீர் உள்ள மற்றொரு கோளைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
James Webb Space Telescope : நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் பல்வேறு அதிசயங்களை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி அண்டத்தில் சிதறிக் கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து எவ்வாறு நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறதோ, அதே போல பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்ற கோள்களைக் கண்டறியும் ஆய்வும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது இந்த ஆய்வையும் எளிதாக்கி வருகிறது. பூமியில் இருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்தில் தண்ணீர், மேகம், வாயு மண்டலம் உள்ளிட்டவை இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
WASP-96 b எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கோள், பால்வெளி அண்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோள்களில் ஒன்றாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழனை விட பாதிக்கும் குறைவான நிறை கொண்ட இக்கோள், வியாழனை விட 1.2 மடங்கு அதிக விட்டம் கொண்டதாகும். இக்கோளில் 538 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
WASP-96 b சூரியனைப் போன்ற அதன் நட்சத்திரத்தை மிக அருகில் சுற்றுகிறது. புதனுக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே, இக்கோளுக்கும் அதன் சூரியனுக்கும் உள்ளது. பூமியில் உள்ள நாள் கணக்குப்படி, இக்கோள் தனது சூரியனை ஒரு சுற்று சுற்ற மூன்றரை நாட்கள் ஆவதாக நாசா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே... வெளியான பரபரப்பு தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR