பிரதமர் மோடி நல்லவர்! அவர் பாகிஸ்தானை ஆள வேண்டும்: கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிய பாகிஸ்தான் நாட்டு தலைவர்களை இகழ்ந்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோ, பரவலாக பகிரப்பட்டு ரீ-ட்வீட் செய்யப்பட்டு, தற்போது ட்விட்டரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பயனர்கள் மிகவும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
பாகிஸ்தானிய யூடியூபர் சனா அம்ஜத் வெளியிட்ட இந்த வீடியோ, நாட்டில் நிலவும் விவகாரங்கள் குறித்து ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக சக பாகிஸ்தானிய பிரஜையின் அவநம்பிக்கை குரல் மற்றும் அவரது விரக்தியைக் காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்திருந்தால், நியாயமான விலையில் பொருட்களை வாங்கி இருக்க முடியும் என்று அந்த நபர் தனது கருத்தை வீடியோவில் பதிவு செய்வதை கேட்கலாம்.
பாகிஸ்தானை விட்டு வெளியேறு, வேண்டுமென்றால் இந்தியாவில் தஞ்சம் புகலலாம் என்ற கோஷம் ஏன் தெருக்களில் எழுப்பப்படுகிறது என்று உள்ளூர்வாசிகளிடம் சனா அம்ஜத் கேட்பதை வீடியோவில் காணலாம். நான் ஏன் பாகிஸ்தானில் பிறந்தேன் என அவர் விரக்தியுடன் கேட்பதையும் வீடியோவில் காணலாம்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!
1947 இல் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், அவரும் அவரது சக நாட்டு மக்களும் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வாங்கி, தினமும் தங்கள் குழந்தைகளுக்கு வயிராற உணவளிக்கும் நிலையில் இருந்திருக்க முடியும் என்று அந்த நபர் கூறுகிறார்.
பாகிஸ்தானில் வாழும் வலியைப் உணர்த்தும் பாகிஸ்தானியரின் வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
"பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அப்படி இருந்திருந்தால், நாங்கள் தக்காளியை கிலோ 20 பாகிஸ்தான் ரூபாய்க்கும், சிக்கனை கிலோ 150 பாகிஸ்தான் ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டருக்கு 50 பாகிஸ்தான் ரூபாய்க்கும் வாங்கி இருப்போம்" என்று வைரல் வீடியோவில் அவர் கூறினார். "எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவ முடியவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!
"நரேந்திர மோடியைத் போல் வேறு யாரும் இல்லை" என்று வாழ்த்தி அவர் கூறுவதை வைரல் வீடியோவில் காணலாம். "மோடி மிகவும் சிறந்தவர், அவரது மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள். நரேந்திர மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவைப்பட மாட்டார்கள், (மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர்) ஜெனரல் (பர்வேஸ்) முஷாரப் கூட தேவையில்லை. பிரதமர் மோடியை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அவர் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. நாங்களோ அதில் எங்குமே இல்லை," என்று அவர் யூடியூபரிடம் கூறுகிறார்.
மோடியின் ஆட்சியில் வாழ நான் தயாராக இருக்கிறேன், மோடி ஒரு பெரிய மனிதர், அவர் மோசமான மனிதர் அல்ல, இந்தியர்களுக்கு நியாயமான விலையில் தக்காளி, சிக்கன் கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு வயிராற ணவளிக்க முடியாதபோது, நாம் ஏன் இங்கு பிறந்தோம் என நினைக்க தோன்றுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
"மோடியை நமக்குக் கொடுத்து, நம் நாட்டை ஆட்சி செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கண்ணீருடன் கூறுகிறார். உள்ளூர் பாகிஸ்தானியர் மேலும் கூறுகையில், தனது நாட்டு மக்கள் தங்களை இந்தியாவுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும், ஏனெனில் இரு நாடுகளையும் ஒப்பிடவே முடியாத நிலை உள்லது. மேலும், இந்தியா எதிரி அல்ல, நண்பன் என்று பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருக்க வேண்டும். பாகிஸ்தான் ஊடகங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊட்டுவதாகவும் அவர் சாடினார்.
மேலும் படிக்க | ஆச்சர்ய தகவல்! பாகிஸ்தானில் உள்ள சில ‘இந்து’ அதிர்ஷ்டசாலிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ