தக்காளி பிரியர்களா நீங்கள்...அப்போ உங்களுக்கு ஓர் ''கெட்ட நியூஸ்"

Tomatoes Side Effects: பெரும்பாலானோர் தக்காளியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தக்காளியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 10, 2023, 02:48 PM IST
  • தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்.
  • யார் தக்காளி உட்கொள்வதை தவிர்க்கலாம்.
தக்காளி பிரியர்களா நீங்கள்...அப்போ உங்களுக்கு ஓர் ''கெட்ட நியூஸ்" title=

பெரும்பாலானோர் தக்காளியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். தக்காளியும் இவற்றில் வருகிறது. ஆம், தக்காளியை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.ஏனென்றால் தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்-

நெஞ்செரிச்சல்
தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. தக்காளி உங்கள் உடலில் பல அமில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும்.

மேலும் படிக்க | என்ன பண்ணாலும் உடல் எடை குறையலயா? இதை குடிச்சி பாருங்க, உடனே குறையும்!!

வயிற்றுப்போக்கு 
அதிகளவு அமிலங்கள் உள்ளதால் தக்காளி உங்கள் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தக்காளியில் உள்ள சலாமெனல்லா உங்களுக்கு அதிகளவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.

சிறுநீரக கற்கள்
கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள இந்த பழம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. ஆனால் இதற்கு எதிர்மறையாக இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று. இது நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். 

லிகோபேண்டோர்மியா
தக்காளியில் லிகோபேன் என்ற சேர்மம் உள்ளது. உடலில் அதிகளவு லிகோபேன் சேர்வது லிகோபேண்டோர்மியா என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த னாய் ஏற்பட்டால் சருமத்தில் ஆங்காங்கே அடர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இது ஆரோக்கியத்தை பாதிக்க விட்டாலும் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cloves Benefits: வெறும் வயிற்றில் 2 கிராம்பு…இவ்வளவு நன்மைகள் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News