இலங்கையின் வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் பதவியேற்றுக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கை தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இலங்கையில் தமிழர் ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.


இந்திய வம்சவாழியை சேர்ந்த இவர் கம்பாஹவில் பிறந்து, அரசியல் மற்றும் கல்வித்துறையில் பல பரிணாமங்களை பெற்றவர். அரசியல் ரீதியான பல சாணக்கியங்களை கொண்ட சுரேன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக பணியாற்றியுளார்.


ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு முறை பெற்று சாதனை படைத்த இவர், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாடுகளின் பல விருதுகளையும் வென்றுள்ளார்.


கனடா ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று ஐனாதிபதி சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின்  ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்களாக கீர்த்தி தென்னக்கோன் மற்றும் கலாநிதி தம்ம திஸாநாயக்க இவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.


முன்னதாக கடந்த வெள்ளியன்று மேல் மாகாணம், மத்திய மாகாணம், தெற்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட  இலங்கையின் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நியமித்தது குறிப்பிடத்தக்கது.