காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டை தன்வயப் படுத்தியுள்ள தாலிபான் அமைப்பு, கொடூரத்திற்கும் கொடுமைகளுக்கும் பெயர் போனது. மர்மங்களும் புதிர்களும் இந்த அமைப்புடன் பின்னிப்பிணைந்தவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தானின் (Afghanistan) முந்தைய அரசாங்கத்தின் அதிகாரிகளையும் அடியோடு வெறுக்கும் சபிஹுல்லா முஜாஹித் என்ற ஒரு தாலிபான் தலைவர் தான் பல ஆண்டுகளாக உலகளவில் உள்ள பத்திரிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு தாலிபான் குறித்த செய்திக் குறிப்புகளை அளித்து வந்தார். செவ்வாய்க்கிழமை, தாலிபான்கள் வரலாற்றில் இடம்பெறவல்ல தங்கள் முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இதுவரை வெறும் பெயராகவே அறியப்பட்ட சபிஹுல்லா முஜாஹித்தின் முகத்தை உலகம் கண்டது.


முன்னர், பல முறை செய்தியாளர்களை தொடர்பு கொண்டு சபிஹுல்லா பேசியபோதெல்லாம், அவ்வப்போது இதே பெயரில் பலர் மாறி மாறி பேசுகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் ஒரு கருத்து இருந்தது. ஆனால், உண்மையில் அப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பது நேற்று தெளிவானது. இந்த மாத துவக்கத்தில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட தாலிபான் அரசின் ஊடகங்கள் மற்றும் தகவல் மையத்தின் இயக்குநரது இருக்கையில் அமர்ந்து சபிஹுல்லா செய்தியாளர்களுடம் பேசினார்.


ALSO READ: இவர்தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபரா? யார் அந்த அப்துல் கானி பராதர்?


முன்னர், ஒரு சிறப்பு தாக்குதல் மூலம் தாவா கான் மேனாபாலைக் கொன்றதாக முன்னர் பொறுப்பேற்ற தாலிபான் செய்தித் தொடர்பாளர், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தங்களுக்கு "வெளியிலிருந்தோ, நாட்டின் உள்ளோ எந்த எதிரிகளும் வேண்டாம்" என்றும், தாங்கள் அமைதியை நாடுவதாகவும் கூறியது முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.


தாலிபான் (Taliban) ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று பலர் அஞ்சினாலும், அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ள தாலிபான் அமைப்பு, பெண்கள் உட்பட அனைவரையும் அழைத்து, அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்றும், இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்பிற்குள் "பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும்" என்றும் உறுதியளித்தனர். ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்விக்கும் சபிஹுல்லா பதில் அளித்தார்.


வெறும் குரலாகவும் பெயராகவும் சபுஹுல்லாவை அறிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் நேற்று அவரது உருவத்தையும் பார்த்தார்கள். ஆனால், தாலிபான்கள் சமரசத்துக்கு தயாராக இருப்பதாகவும், பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியது அனைவருக்கும் வியப்பை அளித்தது.


ALSO READ:ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR