Afghan Update: வானில் ராக்கெட்களின் சத்தம், பதட்டத்தில் படைகள், பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் வரும் நாட்களில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அங்கு ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தது.
காபூல்: காபூலில் இருந்து வெளியேற பலரும் முயற்சித்து வருவதற்கு மத்தியில், பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வான்வழித்தாக்குதல் மூலம் வெடிபொருட்கள் நிரம்பி இருந்த காரை அழித்ததாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, காபூல் மீது பல ராக்கெட்டுகள் பறக்கும் சப்தங்கள் கேட்பதாக AFP தெரிவித்துள்ளது.
இருப்பினும், ராக்கெட்டுகள் எங்கு விழுந்தன அல்லது இலக்குகள் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) வரும் நாட்களில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அங்கு ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தது. கடந்த சில நாட்களாக பல விமானங்கள் மூலம் ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
காபூலில் பதட்டமான நிலைமை: பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24-36 மணிநேரங்களில் மற்றொரு தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு, அங்கு நிலைமை இன்னும் பதட்டமாகியுள்ளது.
ALSO READ: Afghanistan Crisis: இந்தியாவை பற்றிய தலிபான் நிர்வாகத்தின் கருத்து இதுவே!
"விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அடுத்த 24-36 மணிநேரங்களில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று எங்கள் தளபதிகள் எனக்குத் தெரிவித்தனர். படைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களிடன் அனைத்து அதிகாரமும், ஆயுதங்களும் படைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்று பைடன் ஒரு அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், காபூலில் (Kabul) இன்னும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என தகவல்கள் வந்துள்ளதால், தெற்கு விமான நிலைய பகுதி உட்பட, காபூல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். மேலும், உட்பகுதியில் உள்ள புதிய அமைச்சகம், பஞ்ஷிர் பெட்ரோல் நிலையல் அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் இருந்து உடடனியாக விலகுமாறும் அமெரிக்கர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தூதரகம் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ: திடீரென்று காபூலில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதலா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR