ஆஃப்கானிஸ்தானில், 16 வயது மகளின் கண்களுக்கு முன்னரே அவரது தாய் மற்றும் தந்தையை பயங்கரவாதிகள் கொன்றனர். இதைப் பார்த்து மனம் துடித்த அந்த இளம் பெண் சின மிகுதியால், தன் பெற்றோரைக் கொன்ற இரண்டு தாலிபான் பயங்கரவாதிகளையும் கொன்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அந்தப் பெண்ணின் தந்தை அரசாங்கத்திற்கு உதவி செய்தது தெரிய வந்ததால், அதனால் கோவமடைந்த பயங்கரவாதிகள், அவருக்கு பாடம் கற்பிக்க, கோர் மாகாணாத்தில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு வந்தனர். தன் பெற்றோரை தாக்கியவர்கள் மீது அப்பெண் ஆயுதம் கொண்டு தாக்கினார். இதில் சில பயங்கரவாதிகள் காயப்பட்டு உயிர் பிழைத்து அவ்விடத்தை விட்டு ஓடினர்.


தாலிபான்களின் (Taliban) இலக்கு கிராமத் தலைவர் மட்டும் சிறுமியின் தந்தை மீது மட்டுமே இருந்தது என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். தாக்குதலின் போது, ​​கமர் குல் (Kamar Gul) என்ற அப்பெண் வீட்டிற்குள் இருந்தார். பெற்றோர் இறப்பதைக் கண்டதும், அவர் ஏ.கே .47 ஐ எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார். கமர் குல்லின் துணிச்சல் இப்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது.


குல்லின் தாக்குதலால் திகைத்துப்போன தாலிபான் போராளிகளின் மற்றொரு குழு மீண்டும் தாக்குதலுக்கு வந்தபோது, ​​கிராமவாசிகள் அரசாங்க சார்பு ஆயுதமேந்திய படைகளின் உதவியுடன் அவர்களை திரும்ப ஓட வைத்தனர். இதன் பின்னர், மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆரிப் அபார் கூறுகையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் குல் மற்றும் அவரது சகோதரரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளன என்று கூறினார். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளிவந்தவுடன், குல் மிகக் குறுகிய காலத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி விட்டார்.  இதற்கிடையில், மெஷீன் கன்னுடன குல்லின் ஃபோட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது.


ALSO READ: விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு


நஜீபா ரஹ்மானி, தனது பேஸ்புக் பதிவில், ஒரு ஆப்கானிய பெண்ணின் தைரியத்தைக் காணுங்கள் என்று எழுதியுள்ளார். இவர் தைரியத்திற்கு என் வணக்கங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்!! பேஸ்புக்கில் குல்லின் வலிமை மற்றும் தைரியம் இரண்டையும் ஃபாசிலா என்பவர் பாராட்டியுள்ளார். இது தவிர, முகமது சலே தனது பேஸ்புக் பதிவில், "பெற்றோரின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் உங்கள் துணிச்சலால் உங்கள் குடும்பத்திற்கு சிறிது ஆறுதல் கிடைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். தாலிபானி போராளிகள் பெரும்பாலும் அரசாங்கத்தை அல்லது பாதுகாப்புப் படைகளை ஆதரிக்கும் கிராமவாசிகளைக் கொல்வது ஆஃப்கானிஸ்தானில் (Afghanistan) வழக்கமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்ட போதிலும், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.


ALSO READ: அமெரிக்காவிற்கு உளவு பார்த்த உளவாளியை தூக்கிலிட்டது ஈரான்..!!!