ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், பயங்கரவாத அமைப்பான் தாலிபான் வசம் ஆப்கான் சென்றுள்ளது உலகிற்கே ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. தலிபான்கள் இந்த முறை தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு நடக்காது என்று கூறியிருக்கலாம், ஆனால் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள்  அம்பலமாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி மூலம் அம்பலமாகியுள்ள, பெண்களை தாலிபான் நடத்திய கொடூரக் கதைகள் இந்த பீதி உணர்வை மேலும் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி,  இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார். 


வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் (Taliban) பயங்கரவாதிகளுக்கான உணவை தயாரித்த ஒரு பெண்ணின் சமையல் நன்றாக இல்லை என அந்த பெண்ணை தீக்குளிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக அவர் கூறினார். 


ALSO READ | தாலிபான் ஆட்சிக்கு முன்னும் பின்னும்: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்..!!!

அது மட்டுமல்ல, பெண்கள் பாலியல் அடிகைகளாக நடத்தப்பட்டு, சில சமயங்கள் அவர்களை சவப்பெட்டிகளுக்குள் வைத்து, அண்டை நாடுகளுக்கு பாலியல் அடிமைகளாக பயன்படுத்த கடத்தப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக, அயோபி கூறினார். அதோடு பெண்களை, தலிபான் பயங்கரவாதிகளுக்கு திருமணம் செய்து கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர் என அந்த நீதிபதி தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானில் பிறந்த நீதிபதி அயோபி 1990 களின் தலிபான்களின் எழுச்சிக்கு முன்னாதாக உள்ள கால கட்டத்தில் கல்வி கற்றார். 1996 ஆம் ஆண்டு தாலிபான்கள்  கைப்பற்றுவதற்கு முன்பு அவர் தனது மாகாணத்தின் முதல் பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்னும், இருக்கும் பல  சமூக ஆர்வலர்களுடன் தொடர்பில் உள்ள நிலையில், அவர்கள் பல திகில் கதைகளை விவரித்துள்ளனர். அவர்கள் ஆப்கானின் தற்போதைய நிலைமை குறித்து பீதியில் உள்ளனர். 


ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் முதல் செய்தியாளர் சந்திப்பில், தலிபான்கள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும்  என்றும், ஆப்கானை ஒரு பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாகவும் உறுதியளித்தனர். "இஸ்லாத்தின் அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்கள்  அனைத்து துறைகளிலும் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்காது" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார். ஆனால் நாட்டில் உள்ள நிலை வேறுமாதிரியாக உள்ளது


ALSO READ | Afghanistan: ஹக்கானி நெட்வொர்க் வசம் சென்றது பாதுகாப்பு பொறுப்பு; அச்சத்தின் உலகம்


RTA பாஷ்டோ என்ற தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண் அறிவிப்பாளர் ஷப்னம் தவ்ரான், ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி அவரது அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளார். நான் RTA பாஷ்டோ அலுவலகத்திற்கு சென்றேன், ஆனால் ஆட்சி மாறிவிட்டதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். உங்களுக்கு அனுமதி இல்லை, வீட்டிற்குப் போ" என்று அவரிடம் கூறப்பட்டதாக, ஒரு வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.


மற்றொரு நிகழ்வில், ஆப்கானிஸ்தானின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினர் சமீரா அஸ்காரி, தலிபான்கள் தங்கள் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து,  நிலைமை மோசமாக ஆகும் மும் நாட்டின் சிறந்த வீராங்கனைகள் மற்றும் பயிற்சி ஊழியர்களை ஆப்கானிலிருந்து வெளியேற உதவுமாறு அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுத்தார். கோபன்ஹேகனில் உள்ள அஸ்காரி, அஸ்காரி, விளையாட்டு வீராங்கனைகள், தங்கள்  பாதுகாப்பிற்காக,  வீரர்களை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறி, பொது அடையாளங்களை அழிக்க வேண்டும்  எம கேட்டுக் கொண்டுள்ளார். 


ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR