ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 19, 2021, 10:04 AM IST
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்  title=

 

காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களது ஆட்சி, ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான முந்தைய தலிபானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஒட்டு மொத்த உலமும் ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்ப்பாக கவலையுடன் கவனித்து வருகிறது.

தலிபானின் மூத்த உறுப்பினரான வஹீதுல்லா ஹாஷிமி, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது

தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த உறுப்பினர், "ஆப்கானிஸ்தானின் ஷரியா சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமையும், அது ஜனநாயக முறையாக இருக்காது என திட்ட வட்டமாக தெரிவித்தார்

ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆயுதப் படைகளைச் சேர்ந்த முன்னாள் விமானிகள் மற்றும் வீரர்களையும் ஆட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றக் காரணமான வீரர்க்களுடன், ஆப்கான் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இராணுவத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய,  சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அதற்கு, துருக்கி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ரணுவ வீரர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

தலிபான் தலைவர் வஹீதுல்லா ஹாஷிமி

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு நேர்காணலின் போது மூத்த தலிபான் தளபதி வஹீதுல்லா ஹாஷிமி ராய்ட்டர்ஸிடம் பேசினார் 

ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானை ஆளும் தலிபான் அதிபருக்கு தோஹாவில் உள்ள அப்துல் கானி பராதர்  முல்லா உமரின் மகன் மவ்லாவி யாகூப், ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி ஆகிய 3 துணை அதிபர்கள் இருப்பர் கூறப்படுகிறது.

ALSO READ | ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்

இருப்பினும், பராதர் தான் அடுத்த அதிபர் என இதுவரை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 1968 இல் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்த பராதர், ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த தலைவராக உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அப்துல் கானி பராதர், மிகவும் பேசப்படும் தாலிபானின் மிகவும் குறிப்பிடத்தக்க பொது முகமாகவும் இருக்கிறார்.

ALSO READ | Afghanistan Update: 800 பேரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிலிருந்து பறந்த விமானத்தின் புகைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News