காபூல்: ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு தலிபான்களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுபாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்


ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.


ALSO READ | ஆப்கானை விட்டு வெளியேறும் தலைவர்கள்; காபூலை சுற்றி வளைத்த தாலிபான்கள்


நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்


வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.


ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை


பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா


சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்


அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பென்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


ALSO READ | தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR