வாஷிங்டன்: ஆப்கானில் இருந்து அமெரிக்க முழுமையாக விலக்கிக் கொள்வது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அதிபர் ஜோ பிடென் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சமயத்திற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், தாலிபான்கள் ஆப்கானில் வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் ஆப்கானிஸ்தான் படைகள் திணறிக் கொண்டிருப்பதோடு, கடும் தோல்வியையும் சந்தித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் (Taliban) போடும் வெறியாட்டத்தினால், அங்கே பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தாலிபான்கள், தொடர்ந்து பொது மக்கள் மீதும் வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஆப்கான் நிலைமையை மாற்ற, கடந்த 20 ஆண்டுகளாக தங்களால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்து விட்டது என்றும், இனி ஆப்கான் தேசத்தை காப்பற்ற அந்த அரசு தான் போராட வேண்டும் எனவும், தாலிபான்களை தோற்கடிக்க, ஆப்கான் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் நடவடிக்கையை பொறுத்தது என்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற எந்த முடிவும் உத்தரவும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், திடீரென வெளியேற்றுவதற்கு வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்தால், அமெரிக்க ராணுவத்தினர் உதவியுடன் எவ்வாறு தாயகம் அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று ஒரு அதிகாரி கூறினார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி (John Kirby), தூதரக் அதிகாரிகளை அங்கிருந்து அழைத்து வருவதற்கான திட்டம் பற்றி ஆலோசிக்கப்படவில்லை மறுத்துவிட்டார், ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற அதிகாரி இது குறித்து கூறுகையில், ஆப்கானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை, தாயகம் அழைத்து வருவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் நடத்திய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR