இந்தியா உட்பட உலகில் கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் முடிவடையாத நிலையில் காய்ச்சல் தொடர்பான புதிய நோய் பரவல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவில்  தொற்று குறைந்து வரும் நிலையில் வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையில் புதிதாக மற்றொரு கய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது, இது லாசா காய்ச்சல் அல்லது லாசா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதால் இந்த நோய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லஸ்ஸா காய்ச்சலின் இறப்பு விகிதம் இன்னும் 1 சதவிகிதம் என்று நிபுணர்கள் கூறினாலும், பாதிக்கப்பட்ட மூவரில் ஒரு நோயாளி இறந்துவிட்டார். இதை, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகளும் உறுதிபடுத்தி உள்ளனர். இதனால், கொரோனா நோய்த் தொற்றுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | இந்தியாவில் கொரோனா ‘Endemic’ நிலையை நெருங்குகிறதா; தொற்று நிபுணர் கூறுவது என்ன!


பிரிட்டனில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நோயாளி பிப்ரவரி 11 அன்று வடக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்ட அனைவரும் இங்கிலாந்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியவர்கள் என்றும் கூறப்படுகிறது.


லஸ்ஸா காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களின் 80 சதவீத வழக்குகள் அறிகுறிகள் அற்றவர்களாக இருப்பதால், இவர்களை கண்டறிவதும் கடினம். நோய் தீவிரமாக இருந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் அறிவுறுத்தியுள்ளது. லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 15 சதவீதம் பேர் வரை இறக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.


லஸ்ஸா காய்ச்சல் பாதிக்கப்பட்ட எலிகளின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில சந்தர்ப்பங்களில், நோய்த் தொற்று கண்கள், வாய், மூக்கு போன்ற பாதிக்கப்பட்ட நபரின் சளி சவ்வுகளின் தொடர்பு மூலமாகவும் பரவுகிறது என்கின்றனர்.


லஸ்ஸா காய்ச்சல் முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவின் லஸ்ஸா நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரத்தின் பெயரே இந்த நோயின் பெயரானது. நைஜீரியாவில் இரண்டு செவிலியர்கள் இறந்த பிறகு, நோய் குறித்து உலகம் அறிந்து கொண்டது.


லாஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் சோர்வு, தலைவலி, பலவீனம், காய்ச்சல் போன்றவை. இது தவிர, சில சமயங்களில் சுவாசிப்பதில் சிரமம், முகம் சிவந்து போவது, ரத்தக்கசிவு, நெஞ்சு வலி, வயிற்று பிரச்சனை அல்லது வாந்தி போன்றவற்றை உணரலாம்.


லஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் தோன்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சில சந்தர்ப்பங்களில் நோயாளி பல உறுப்பு செயலிழப்பால் இறக்கக்கூடும் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் கூறுகிறது.


கொரோனா தொற்றுக்கு மத்தியில்,  எலிகள் மூலம் பரவும் லஸ்ஸா காயச்சல் நோயைத் தவிர்க்க, வீட்டில் அலுவலத்தில் எலிகள் தொல்லை இல்லாமல் பார்த்துக் வேண்டும் என்பதோடு,  வீட்டில் தூய்மை மற்றும் காற்றோட்டத்தை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.


மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR