FaceBook பயனர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலயிடிகா நிறுவனம் மூடப்பட்டபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டை சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட Facebook பயனாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் தேர்தல் முடிவை மாற்றியமைத்தே இந்த தகவல் திருட்டு தான் எனவும் கூறப்பட்டது.


பிரிட்டனை சேர்ந்த இந்த கேம்பிரிட்ஜ் அனலயிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களைத் திருடி அதனை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக பயன்படுத்தியது என அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தினார்.


இதற்காக Facebook நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.