Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!
ட்ரம்பிற்கு தேர்தல் தோல்வியை தவிர மற்றொரு பெரிய சிக்கல் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் குறித்து ஒரு முக்கிய செய்தி வருகிறது. ட்ரம்ப்பிற்கு தேர்தல் தோல்வியை தவிர மற்றொரு பெரிய சிக்கல் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது குடும்ப வாழ்க்கையும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தில் உதவியாளராக இருந்தவர் இந்த தகவலை கூறியுள்ளார். டிரம்ப் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் அவரை விவாகரத்து செய்யும் நேரத்திற்காக மெலனியா டிரம்ப் காத்திருக்கிறார் என அவர் கூறுகிறார். இந்த தகவல், ஞாயிற்றுக்கிழமை தி டெய்லி மெயில் யுகே என்ற பத்திரிக்கையில் வந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடியான மெலனியா டிரம்பின் (Melania Trump) மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவரது தோழி ஸ்டெபானி வோல்காஃப் இதைக் கூறினார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் தம்பதியினரின் படுக்கையறைகளும் தனித்தனியாக இருந்தன என்றும் அவர்களது திருமணம் ஒரு ஒப்பந்தம் தான் என்று கூட அவர்கள் கூறும் அளவிற்கு சென்றனர்.
அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் சக ஊழியர் ஒமரோஜா மணிகால்ட் நியூமன், தம்பதியரின் 15 வருட திருமண ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகக் கூறினார்.
2016 ஆம் ஆண்டில் தனது கணவர் வென்றபோது, அவர் வெல்வார் என்று எதிர்பார்க்காத காரணத்தினால், அவர் வெற்றி பெற்ற போது, அதை நினைத்து மகிழ்ச்சி கண்ணீர் வடித்ததாக, மெலனியா டிரம்ப் பற்றி ஒரு சம்பவம் குறித்தும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை..!!!
தனக்கும் அவரது கணவர் டிரம்பிற்கும் (74) இடையிலான உறவு மிகவும் சிறந்தது என்று 50 வயதான மெலனியா ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார். இருப்பினும், பொதுவில் அவர்களின் உறவில் நெருக்கம் இருப்பது தெளிவாகக் காணக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த்ச ஒப்பந்ததில் அவருடன் தொடர்புடைய எந்த புத்தகத்தையும் வெளியிட முடியாது, எந்த நேர்காணலையும் கொடுக்க முடியாது என கூறப்படுகிறது. அதே நிலை தான் மெலினாவிற்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் தோல்வியை சந்தித்துள்ளாரா ட்ரம்ப் என்பதை வரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.
ALSO READ | H-1B விசா வரம்பு தொடர்பாக ஜோ பிடன் முக்கிய முடிவு எடுக்கக் கூடும்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR