எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!
கோஹினூர் வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது.
உலகின் பல விதமான வைரங்கள் இருந்தாலும், மிகவும் மதிப்புமிக்க வைரம் கோஹினூர் வைரம் தான். கோஹினூர் வைரம் இந்தியாவிற்கு சொந்தமானது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள தற்போது எலிசெபத் ராணியின் கிரிடத்தில் இந்த வைரம் இருக்கிறது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகள் செய்தும் வைரம் இந்தியாவிற்குள் வரவில்லை. இந்த நிலையில் தற்போது உடல்நலக் குறைவால் ராணி எலிசபெத் காலமாகிவிட்டார். இதையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2800 வைரங்களை கொண்ட இந்த கிரீடத்தில் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் மகுடமாக உள்ளது.
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து வந்த நிலையில், அவரது மரணத்தை அடுத்து, எலிசபெத் ராணியின் மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள்லர். எனவே, அவரது மனைவி கமீலாவிற்கு இந்த வைரம் செல்லும் என கூறப்பட்டுள்ளது. சாரலஸின் முதல் மனைவி டயானா 1996ம் ஆண்டு கார் விபத்தில் இறந்து போன நிலையில், அவர் கமீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது
உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றான கோஹினூர் 'ஒளியின் மலை' என்று பிரபலமாக அறியப்பட்டது. இது இந்தியாவில் வெட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. அவர் கோஹினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு இங்கிலாந்து சென்றது.
மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ