ரஸ்யாவின் சைபீரியாவில், ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாக ரஸ்ய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தானது, கடந்த சில தினங்களில் ஏற்படும் இரண்டாவது விபத்து ஆகும். 


மாஸ்கோவில் இருந்து சுமார் 3000 km தொலைவில் உள்ள டோம்ஸ்க் பிராந்தியத்தின் அலெக்ஸாண்ட்ரோவோ என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விபத்துக்குள்ளான இந்த Mi-8 ஹெலிகாப்டர் ஆனது, உள்ளூர் மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் போது விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், உதிரி பாகங்களை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஒரு நாள் முன்னதாக, 148 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் மாஸ்கோவில் விபத்துக்குள்ளானதில் 71 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது!