ஸ்வீடனில் பரவிய வன்முறை தீ இப்போது அண்டை நாடான நோர்வேக்கும் பரவியுள்ளது. நார்வே தலைநகர் ஒஸ்லோவில்  வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் நகல்களை எதிர்ப்பாளர்கள் கிழித்து எறிந்ததாகக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நார்வே நாடு இஸ்லாமியமயமாவதை எதிர்த்து ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு உறுப்பினர் குர்ஆனை எடுத்து அதன் நகல்களைக் கிழித்தார். இதனால் ஆத்திரமடைந்த  இஸ்லாமிய ஆதரவாளர்கள் வன்முறை போராட்டங்களில் இறங்கினர்.



இது தொடர்பாக ஏராளமான மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 முன்னதாக வெள்ளிக்கிழமை அன்றும் ஸ்வீடனில் வன்முறை கலவரம் வெடித்தது.


ஐரோப்பில் அமைதி பூங்காவாக திகழும் நாடுகளில் ஒன்று ஸ்வீடன். அங்கே வெள்ளிக்கிழமை குரான் அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்ததில் இருந்து கலவரம் வெடித்தது. ஏராளமான மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இந்த நேரத்தில், போராட்டக்காரர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். சிலரை கைது செய்துள்ளனர்.


மேலும் படிக்க | Sweden Riots: பற்றி எரியும் ஸ்வீடன்... பிரச்சனைக்கு காரணம் என்ன..!!!