ஐரோப்பில் அமைதி பூங்காவாக திகழும் நாடுகளில் ஒன்று ஸ்வீடன். அங்கே வெள்ளிக்கிழமை குரான் அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்ததில் இருந்து கலவரம் வெடித்தது. ஏராளமான மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இந்த நேரத்தில், போராட்டக்காரர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். சிலரை கைது செய்துள்ளனர்.
ஸ்வீடனின் தேசியவாத கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவர் ராஸ்மஸ் பலுதான் வியாழக்கிழமை மால்மோ நகரில் 'நோர்டிக் நாடுகளில் இஸ்லாமியமயமாக்கல்' குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்தார். இருப்பினும், சட்டம் மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு ராஸ்மஸ் பலுதானிற்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாக நகரத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதனால்,கோபமடைந்த ஆதரவாளர்கள், வெள்ளிக்கிழமை, அவரது ஆதரவாளர்கள் குர்ஆனின் சில நகல்களை மால்மோவில் உள்ள ஒரு சாலையில் வைத்து எரித்தனர்.
குரானை எரித்ததால் கோபம் கொண்ட இஸ்லாமிய சமூகத்தினர், நகரையே தீ வைக்க வன்முறை போராட்டத்தில் இறங்கினர்.
வடக்கு ஐரோப்பாவில் சில நாடுகள் நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கும். இந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவு. உலகில் சமீபத்திய வன்முறைகளில் லட்சக்கணக்கான அகதிகள் இந்த நோர்டிக் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதில் போலந்தைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஏராளமான முஸ்லிம் மக்களுக்கு புகலிடம் அளித்துள்ளன. இதனால் சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
ALSO READ | ஜப்பானில் 1800களில் கொள்ளை நோய் பரவியதா.. அகழ்வாய்வில் கிடைத்த 1500 எலும்புக்கூடு..!!!
ராஸ்மஸ் பலுதன் ஸ்வீடனின் தேசியவாத கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் உயர் தலைவரும் வழக்கறிஞருமாவார். அவர் தீவிர தேசியவாத கட்சி ஸ்ட்ராம் குர்ஸ் என்ற கட்சியை 2017 இல் நிறுவினார். பல வீடியோக்களில், அவர் முஸ்லிம்களை விமர்சனம் செய்வதை காணலாம். வெள்ளிக்கிழமை ஸ்வீடனுக்குள் நுழைவதற்கு அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?
ஜூன் மாதம், தனது கட்சியின் சமூக ஊடக சேனல்களில் இஸ்லாமியர்களை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டதற்காக பலுதன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அதற்காக அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், இனவெறியை தூண்டும் உரையை நிகழ்த்தியதற்காக அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.