லாகூர்: பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் பெண் பணியாளர், ஒரு இந்திய பாட்டுக்கு உதட்டசைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதயனையடுத்து இந்த வீடியோ குறித்து விசாரணைக்கு ஆணையிடப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் ஊழியர்களுக்கு கட்டளையிட்டு உள்ளது. மேலும் விமானப் பாதுகாப்புப் படை விதிகளின் படி, பெண் ஊழியர், அதன் விதிகளை மீறி உள்ளார். எனவே அவரது பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு சலுகைகள் குறைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பெண் ஊழியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


பாகிஸ்தானியக் கொடியுடன் தொப்பி அணிந்து கொண்டு, இந்திய பாடலுக்கு லிப்-சிங்கிங்ஸ் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கைக்கு உள்ளான பெண் ஊழியர் லாகூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சியால் கோட் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.