தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் ஏர் ஃபிரான்ஸ் நிறுவனம்!
ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது!
ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது!
கடந்த சில மாதங்களாக ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே ஊதிய தொடர்பான சச்சரவுகல் நடைபெற்று வந்துள்ளது. இதை தொடர்ந்து, நிர்வாகம் முன்வைத்த புதிய ஊதியத்திட்டத்தை பணியாளர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜீன் மார்க் ஜனைலாக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை தொடர்ந்து, இந்நிறுவனம் கூடிய விரைவில் திவாலாகும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஃபிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்ததால் இந்த நிறுவனத்திற்கு இருந்த நற்பெயர் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏர் ஃபிரான்ஸ் நிறுவன பங்கு மதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. முதல் நாளில் 13 சதவிகிதம் வரை சரிவைக்கண்ட பங்குகள், தற்போதைய வர்த்தகத்தில் 9.7 சதவிகிதம் அளவிற்கு சரிந்துள்ளது. தொடர்ச்சியான சரிவால் ஏர் ஃபிரான்ஸ் பங்கொன்றின் விலை 7.31 யூரோக்களாக குறைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள் அரசின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது!